சட்ட சபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X