மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்தில் 3 நாட்கள் முட்டை.. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு..!
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சிறுதானிய சிற்றின்ப திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மாணவர்களுக்கு ரொட்டி, பால், பழங்கள் வழங்கும் திட்டமும் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தொகுதி அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





