அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு..!
அனைத்து குடும்பத்தைதாரர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு செய்யப்படாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
குடும்ப அட்டையில் உள்ள பெயரில் அனைவரின் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்றும் விரல் கையை பதிவு செய்யாவிட்டால் அட்டைகளில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன. கைவிரல் ரேகை சரி பார்ப்பு குறித்து வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு தரப்பொழுது விளக்கம் அளித்துள்ளது.
அதில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை சரி பார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறு இன்றி
இந்த பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் பொழுதோ அல்லது பொருட்கள் வாங்க கடைக்கு வரும்பொழுதோ கைரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதுவரை 63 சதவீதம் குடும்பத்தாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன எனவும் மீதி உள்ள அட்டையாளர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.





