கோவை கே.ஜி. மருத்துவமனையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா!
கோவை கே.ஜி. மருத்துவமனையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மருத்துவத் துறையில் சிறந்து ஆசிரியப்பணி யாற்றிய பத்மஸ்ரீ திரு பக்தவச்சலம் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று பள்ளிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த நிறுவனங்களில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கேஜி மருத்துவமனையில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது இதில் மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவரும், கோவை மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவ துறையில் பல்வேறு சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய கேஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ திரு ஜி பக்தவச்சலம் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

இதில் அவருக்கு விருதுகள் வழங்கி மருத்துவர்கள் பாஸ்கரன், ராவ், கிரி,சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசுகையில், மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதில் பிற மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பிரிவினருக்கும் ஒரு குருவாகவும் பணியாற்றி வரும் அவருக்கு இந்த ஆசிரியர் தினம் விழாவில் எங்கள் அனைவரும் சார்பாக இந்த நல்லாசிரியர் விருதை அவருக்கு வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




