74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மங்கை அம்மாள் இவர்கள் இருவருக்கும் கடந்த 1962ம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது திருமணமாகி நீண்ட காலமாக இருவருக்கும் குழந்தை பேறு இல்லாததால் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன இதனால் கிட்டத்தட்ட 57 வருடங்களாக குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ளனர் இந்த தம்பதியினர்.
இந்நிலையில் இவர்களை போல குழந்தைப்பேறு இல்லாத 55 வயதுடைய பெண் ஒருவர் செயற்கை முறையில் குழந்தை பெற்று இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனை கேள்விப்பட்ட மங்கை அம்மாள் அதே மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை பெற ஆரம்பித்தார். அந்த தொடர் சிகிச்சையின் பலனாக மங்கை அம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட இந்திய மூதாட்டி என்ற சாதனையை படைத்துள்ளார்.

மங்கம்மாள் இதுகுறித்து மருத்துவர் உமாசங்கர் கூறுகையில் மங்கைம்மாவிற்கு அறுவைசிகிச்சை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடந்தது என்றும் தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர் என்றும் கூறினார். மேலும் மங்கை அம்மாவின் வயது மூப்பின் காரணமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும் குழந்தைகளுக்கு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாத இந்தச் சூழ்நிலையில் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியில் இருந்து பெறப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்க படுகிறது என்றும் கூறினார்.

இது மட்டுமல்லாமல் மங்கை அம்மாவிற்கு மாதவிடாய் நின்று 25 ஆண்டுகள் ஆகிறது என்றும், ஆனாலும் எப்படியாவது தாய் ஆகிவிடும் என்ற தீராத ஆசை தான் அவரை இங்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது என்றும் கூறினார்.மேலும் அங்கேயும் அவருக்கு வயதாகி விட்டாலும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருந்தார் என்றும் அவருடைய கணவருடைய ராஜாவின் உயிரணுக்கள் வைத்து வேறு ஒரு பெண்ணின் கரு முட்டை வைத்து முறையில் மங்கைமாவிற்கு செலுத்தப்பட்டு இப்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




