பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் இல்லை: நிதின் கட்கரி
பெட்ரோல் டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் களுக்கான மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக எரிபொருள் மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் தடை செய்யப்படுமா என தயாரிப்பாளர்கள் கவலை கொண்டனர்.
அதற்கு பதிலளித்த நிதின்கட்கரி, எரிபொருளில் ஓடும் வாகனங்களை தடை செய்யும் எண்ணமில்லை என தெரிவித்தார். அந்த துறையை மீண்டும் எழுச்சி பெற செய்ய மத்திய அரசு முழுமையான ஆதரவை கொடுத்து வருவதாகவும், குறிப்பாக விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி குறைப்பது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




