விழுப்புரம் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்..!
மரக்காணத்தில் கடற்கரையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீன்கள் செத்து மிதக்கின்றன. மரக்காணம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பக்கிங் ஹாம் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் நீரானது அருகில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மரக்காணம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு டன்கணக்கான மீன்கள் செத்து கடற்கரையோரம் கிடைக்கின்றன.





