கைரேகை இல்லை என அழைக்கழிப்பு.. வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு கிடைக்கவில்லை..!
கைரேகை விழவில்லை என வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு தர அதிகாரிகள் மறுப்பதாக மூதாட்டி குற்றம் சாட்டை அழுது புலம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதிக்கு உட்பட்ட நகர் பகுதியில் வாசித்து வருபவர் வள்ளியம்மா. இவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் இரண்டு வருட காலமாக ரேஷன் கடைகளில் எந்தவிதமான பொருட்களும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன் வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் என இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேஷன் கடைக்கு சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியப்படவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மன வேதனைகள் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.





