பாலியல் வன்கொடுமை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது..!
கன்னியாகுமரியில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் தனது வீட்டருகே வசித்து வந்த 11-ம் வகுப்பு மாணவியோடு நெருங்கி பழகி வந்துள்ளார். மாணவியின் கல்விக்கு உதவுவது போல் நோட்டு புத்தகம், செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்த சுந்தர்சிங் சில தினங்களுக்கு முன்பு மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாணவியுடன் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டவர் பலமுறை அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் இந்த மாணவியை போல் பலரையும் அவர் பாலியல் ரீதியாக காணொளி பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.





