--- --:--:-- --

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தில் இணையக்கூடாது : மு.க.ஸ்டாலின்

67486

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் நிலைய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்திருப்பதும் தமிழக அரசு நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

 

நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து விடக்கூடாது என்ற மக்கள் விரோத நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு அதிமுக அரசில் இணைந்து கூட்டணி வைத்திருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறா.ர் எனவே உரிமையை விட்டுக் கொடுத்து பொது விநியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் இந்த திட்டத்தில் இணைய கூடாது என்றும் அவ்வாறு ஒரு முடிவெடுக்கும் முன்பாக ஜனநாயக ரீதியாக கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும் தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon