--- --:--:-- --

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க கூடாது : வைகோ!

VAIKOMDMKGENERALSECRETARY

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைய கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார் .இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மாநில உணவுத்துறை அமைச்சர் கூட்டத்தில் பேசிய ராம்விலாஸ் பஸ்வான் ஆதார் இணைப்பில் உள்ள குறைபாடுகள் களையப்படும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகமும் இணைக்கப்பட்டு விடும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதே கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் காமராஜ் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் அமலாகும் என்று பேசி இருப்பதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அமைச்சரின் இந்த கருத்து பாஜக அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடிபணிந்து இருப்பதை எதிரொலிக்கிறது என்று வைகோ சாடியுள்ளா.ர் வட இந்திய மக்களை தென் மாநிலங்களில் வழிந்து குடியேற்றவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகத்தில் பொது பகிர்வு முறை சீர்குலைந்து விடும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon