--- --:--:-- --

பிக் பாஸ் டைட்டில் வின்னர் மீது வழக்கு பதிவு..!

9

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றியாளர் பிரசாத் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு தமிழ்நாட்டை போலவே பிற மொழிகளிலும் நேயர்கள் அதிகம்.

 

தெலுங்கு சீசன் 7 போட்டியின் பினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. கடுமையான போட்டி நிலவியநிலையில் பல்லவி பிரசாத் வின்னராக அறிவிக்கப்பட்டதோடு அவருக்கு 35 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

 

பல்லவி பிரசாத் ரசிகர்கள் அமர்தீப் அவர்களின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதோடு அரசு பேருந்தின் பின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பொது அமைதிக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் பிரசாத் ரசிகர்கள் நடந்து கொண்டதால் பல்லவி பிரசாத் மீது ஒன்பது பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon