வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!
சாத்தான்குளம் அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிராமத்தில் சுற்றுலா பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பகுதிக்கு சென்ற பொழுது காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலையோரத்தில் பேருந்து மோதி நின்றது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்களை மீட்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





