--- --:--:-- --

மாணவி பரபரப்பு புகார்.. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்..!

5

சேலத்தில் ரயிலில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளது. கேரள மாநிலம் சிந்துநூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.

 

முன்பதிவிடாத பெட்டியில் அமர்ந்திருந்த அந்த மாணவியுடன் ஏசி பெட்டியில் இடம் இருப்பதாக ஒரு டிக்கெட் பரிசோதகர் அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது மாணவியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து போலீசில் சொல்லிவிட்டதும் டிக்கெட் பரிசோதகர் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

 

இது குறித்து மாணவி அளித்த புகாரில் விசாரணை நடத்திய பொழுது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த டிக்கெட் பரிசோதகர் பெங்களூருக்கு தப்பி சென்றது தெரியவந்தது. அதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon