--- --:--:-- --

கொட்டும் கனமழை.. மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் : ஆளுநர் ரவி

1

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

எக்ஸ் தளத்தில் ஆளுநர் போட்ட பதிவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சகோதர சகோதரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அவசர தேவை தவிர்த்து மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் படி செயல்படவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

மத்திய, மாநில அரசுகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

 

பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைக்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon