--- --:--:-- --

இன்னமும் வடியாத வெள்ளத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!

8

சென்னையை மணலி புதுநகர், எழில் நகர், கணபதி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் கழிவு நீரில் கலந்து தேங்கி நிற்பதால் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

 

தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற கோரி அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வளசரவாக்கம் மண்டலம் 11க்கு உட்பட்ட எஸ்பிஎஸ் நகர், சுப்பிரமணிய நகர், ஸ்ரீதேவி குப்பம் பகுதிகளிலும் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon