புல் அறுக்க சென்ற இளைஞரை கடித்துக் கொன்ற புலி..!
கேரள மாநிலம் வயநாட்டில் புல் அருக்க சென்ற இளைஞரை புலி தாக்கிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த பிரதேஷ் என்ற இளைஞர் மாடுகளுக்கு புல் அறுக்க சென்றுள்ளார்.
அப்பொழுது வெகு நேரம் ஆகியும் பிரதீஸ் திரும்பாததால் அவரது சகோதரர் தேடி சென்று பார்த்த பொழுது வயல்வெளியில் சடலம் கிடந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் இளைஞரை தாக்கிக் கொண்டதை உறுதி செய்தனர். இதே பகுதியில் புலியின் தாக்குதலுக்கும் உள்ளான இரண்டாவது சம்பவம் இது என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





