பாலத்தின் நடுவே சிக்கிய நாய் குட்டி..!
பாலத்தின் இடுக்கில் சிக்கிய நாய்க்குட்டி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. புதுச்சேரி மாநில மார்க்கெட் பிராந்தியத்தில் உள்ள பாலத்தின் இடுக்கில் நாய்க்குட்டி கத்திய சப்தம் கேட்டது.
இதனை பார்த்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்த காயமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்டது. வெளியே வந்த உடன் குட்டி ஓடியது அந்த பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.






