மாநில மொழிகளின் தேர்வு நடத்த வேண்டும் : முதல்வர் சித்தராமையா கருத்து
அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சித்திராமையா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் மாணவர்கள் அவர்களுக்கு தேர்வு எழுத தெரிந்த மொழிகளில் தேர்வு வைக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் பொதுவானதாக தேர்வு விதிமுறைகள் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் இதனை மறுபரிசீலனை செய்ய மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





