மகனுக்காக வாங்கி கொடுத்த புதிய பைக்.. அதன்பின் நடந்த சோகம்..!
பெற்றோர் ஆசை ஆசையாய் வாங்கி கொடுத்த விலை உயர்ந்த பைக் மகனின் உயிரை பறித்த சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சி மணிகண்டன் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சங்கர் குண்டூரில் செயல்படும் எம் ஐ டி கல்லூரியில் பயின்று வரும் தனது மகனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விலை உயர்ந்த கேடிஎம் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
கூலி தொழிலாளிகள் என்றாலும் தங்களது மகன் விருப்பப்பட்டு கேட்டதால் வசதிக்கு மீறி அந்த பைக்கை வாங்கி கொடுத்து அவன் இந்த பைக்கில் வலம் வருவதை பெருமையுடன் பார்த்தனர்.
இந்த நிலையில் சிவா பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி மதுரை சாலையில் tata ace வாகனத்தின் அடியில் சிக்கி சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் உட்பட பலரை அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





