வயிறு வலிக்காக மருத்துவமனை சென்ற சிறுமி.. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வயிறு வலி காரணமாக அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை எடுத்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அதில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து விஷ்ணு, மோகன்ராஜ், பிரதீப், சிவகுமார், துரை ஆகிய ஐந்து பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விஷ்ணு வேறொரு வழக்கில் சிறையிலிக்கும் நிலையில் மற்றும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





