பள்ளிக்கு செல்லாமல் சிறுவன் நடத்திய நாடகம்.. போலீசார் அதிர்ச்சி..!
ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் பயந்து பள்ளி செல்லாமல் ஏமாற்றி வந்த மாணவன் தான் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 14 வயது சிறுவனாக இவரது மகன் அரசம்பட்டியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் பின்தங்கியிருந்த விட்டதாக கூறப்படுகிறது.
ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் பயந்து மாணவன் பள்ளி செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்று இருக்கிறான். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய மாணவனை ஒரு கும்பல் கடத்தியதாகவும் காருக்குள் தன்னைப் போலவே நான்கு சிறுவர்கள் கடத்தப்பட்டிருந்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் சிறுவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனே இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் சிறுவனை அவர் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் படிப்பில் பின்தங்கியிருந்த மாணவன் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் பயந்து பள்ளி செல்லாமல் நாடகமாடியது தெரிய வரவே மாணவனை எச்சரித்த போலீசார் அவரின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





