--- --:--:-- --

மகனை பார்த்துவிட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த தந்தை.. நடுவானில் நிகழ்ந்த சோகம்..!

8

மெரிக்காவில் உள்ள மகனை பார்த்துவிட்டு விமானத்தில் தனது மனைவியுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் இவர்.

 

அங்கு அவரது மகன் அமெரிக்காவில் தனியாக இருக்கிறார். சுகித்ராஜ் அமெரிக்காவில் இருக்கும் மகனை பார்ப்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் அமெரிக்காவில் சென்றிருந்தார்.

 

இந்நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்ததால் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னை வந்து கொண்டிருந்தனர். பறந்து கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுகி ராஜ் வலியால் துடித்தார்.

 

இதையடுத்து உடனடியாக விமானத்தில் பயணி கொண்டிருந்த பயணிகளில் மருத்துவர்கள் ஆகியோர் விமான பணி பெண்களோடு சேர்ந்து சுகிராஜ்க்கு மருத்துவ உதவி அளித்தனர். பின்னர் சென்னையில் தரையிறங்கியதும் பரிசோதனை செய்த பொழுது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon