தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1300 விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.
தொடர்ந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணகிரி அணையில் கரைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 1,258 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் கடற்கரையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.





