--- --:--:-- --

பேருந்து நிலையத்தில் குடிமகன் செய்த அட்டூழியம்..!

6

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை செய்த நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்த கடைக்காரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென நாற்காலியில் அவரது நிலையில் சிறுநீர் கழித்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணை நடத்த முற்பட்ட பொழுது அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்வதாக கூறப்படுகிறது.

 

மருத்துவமனை குறிப்புகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் சீனிவாசன் என்பதும் பழைய பேருந்து நிலையத்தில் மேன்பவர் நிறுவனம் நடத்தி வருவது தெரிய வந்தது. அவரை தேடி பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon