--- --:--:-- --

பொதுமக்களை பீதி அடைய வைக்கும் ஜட்டி கொள்ளையர்கள்..!

9

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற ஜட்டி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமார்.

 

இவர் அருகில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது வீட்டினுள் உடல் நுழைவதற்கு எண்ணெய்யை தடவிக்கொண்டு நள்ளிரவில் புகுந்த ஜட்டி கொள்ளையர்கள் வீட்டிலிருந்து இரண்டு சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை திருடி சென்றுள்ளனர்.

 

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் போலீசில் புகார் அளித்த நிலையில் இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அருகில் உள்ள ஜெயச்சந்திரன் என்பவர் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon