ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே விமான நிலையத்தில் மோதல்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்த அவருடைய ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மதுரையில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆலந்தூரை சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் தற்காலிக பாஸ் பெற்று விமான நிலையத்தின் முன் பகுதி வரை சென்று வரவேற்று அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாவரத்தை சேர்ந்த ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பாக மாறியது.
அங்கு வந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இருதரப்பையும் தடுத்து நிறுத்தினர். இது போன்று நடந்து கொண்டால் ஓபிஎஸ் வரும் பொழுது ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





