--- --:--:-- --

மகளிர் உரிமை திட்டத்திற்காக கணக்கெடுத்த கிராம நிர்வாக அலுவலர் தாக்கிய இளைஞர்..!

5

யிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக தலைநகரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் என்பவர் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

 

அப்பொழுது வடக்கு வீதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் கணக்கெடுக்க வரவில்லை எனக்கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டார். வாக்கு வாதத்தின் பொழுது முருகனின் மகன் தீனதயாளன் என்பவர் திடீரென விஏஓ உதயகுமாரை தாக்கினார்.

 

இதில் காயமடைந்த அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரையடுத்து தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon