பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்..!
இந்தியா கூட்டணியில் முக்கிய பங்காற்றி வரும் பீகார் முதலமைச்சர் நிதிக்குமாரை பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசியவர் சொந்த மாநிலத்திலேயே நிதீஷ்குமார் நிலை மோசமாக உள்ளதாகவும் பீகாரில் வெற்றி பெற முடியாத நிலையில் நிதிஷ்குமார் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிதீஷ் குமாரிடமும் அவரது கட்சியிடமும் ஒன்றும் இல்லை எனக் கூறிய பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அவரால் என்ன செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.





