பாலில் கலப்படமா? தமிழக – கேரள எல்லையில் அதிகாரிகள் சோதனை..!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு அனுப்பப்படும் பாலில் கலப்படம் உள்ளதா என்று தமிழக கேரள எல்லையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பாயாசம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்க கேரளாவில் பாலின் தேவை அதிகரித்து இருக்கிறது.
இதற்காக தமிழகத்தில் இருந்து பால் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பால் கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக வந்து தகவலையடுத்து தமிழக கேரள எல்லையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் குமுளி சோதனை சாவடியில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்படும் பாலில் ரசாயனம் கலப்பு இல்லை என முடிவு தெரிந்த பின்னரே அவை கேரளத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாக மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.





