தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரை திறந்து விடக் கோரி கடிதம்..!
சென்னை மாநகரில் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய தேவையான கிருஷ்ணா நீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு எழுதி இருக்கும் கடிதத்தில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரில் இந்த ஆண்டு குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தேவைக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.
ஆனால் நடப்பு நீர் வழங்கும் பருவத்தில் நேற்று வரை 1.3 டிஎம்சி நீரை மட்டுமே ஆந்திரா அரசு வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஊத்துக்கோட்டையில் ஜீரோ பாயிண்ட் எலைக்கு நேற்று வினாடிக்கு 39.5 கன அடி நீர் மட்டுமே வந்தது.
எனவே குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா நீரை திறந்து விட கோரி சென்னை மண்டல நீர்வளத்துறை பொறியாளர் அசோகன் ஆந்திர மாநில நீர்வளத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





