--- --:--:-- --

படுக்கை வசதி பற்றாக்குறை.. வராண்டாவில் படுத்திருந்த தாய், பச்சிளம் குழந்தை..!

5

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு படுக்கை வசதி பற்றாக்குறையால் பிறந்த குழந்தையுடன் தாய் நடைபாதை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் புதன்கிழமை ராதிகா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

குழந்தையின் கைவிரல் இடுக்குகளில் சதை வளர்ச்சி இருந்ததால் மேல் சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை மட்டும் அனுமதிக்கப்பட்டது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக தாய் ராதிகா மருத்துவமனை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இன்றி தாய் மட்டும் குழந்தை வராண்டாவில் படுத்திருக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து மகப்பேறு நிர்வாகிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon