--- --:--:-- --

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து சக்கரம்..!

3

கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

அதன்படி கோவை போத்தனூர் பகுதியில் ரயில்வே மண்டபம் அருகே குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட சாலை சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த வழியாக போதனூரில் இருந்து துடியலூர் செல்லும் அரசு பேருந்து சரியாக மூடப்படாமல் இருந்த குழியில் சிக்கியது.

 

பேருந்தின் முன்புறத்தில் சக்கரம் அரைவாசிக்கு வேல் சிக்கி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றிவிடப்பட்டனர்.

 

பின்னர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து குழியில் இருந்து வெளியே எடுத்தவுடன் காவல்துறையினர் போக்குவரத்தின் நெரிசலை சீர் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon