--- --:--:-- --

ஓசியில் கிளாஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்..!

6

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மது குடிப்பதற்கு கிளாஸ் தர மறுத்த வியாபாரியின் கடையை அடைத்து உடித்த கஞ்சா போதை நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து மனைவி மகளையும் அறிவாளால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.

 

முத்தையாபுரம் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் நாகமுத்து. இவரது கடைக்கு வந்த முகேஷ் என்ற கஞ்சா போதை நபர் மது குடிக்க தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ் தருமாறு கேட்டுள்ளார்.

 

அதற்கு நாகமுத்து பணம் கேட்டதால் அவரது கடையை அவர் அடித்து சேதப்படுத்தினார். இவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஆந்திரமடைந்த முகேஷ் கூட்டாளிகளுடன் சென்ற நாகமுத்து அவரது மனைவி மற்றும் மகளை அறிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

 

நாகமுத்து குடும்பத்தினர் போராடி முகேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருவர் தப்பிச்சென்றதாக கூறும் நாகமுத்து குடும்பத்தினர் அவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon