மூளையை பாட்டிலுக்குள் அடைத்து வைத்து பூஜை..!
தேனியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நண்பனை போலீசில் சிக்க வைத்து நூதன திட்டம் தீட்டியவர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரில் இருந்து அலெக்ஸ் பாண்டியன் உட்பட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது காரில் இருந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட நுரையீரல், மூளை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அலெக்ஸ் பாண்டியன், நண்பன் ஜெயின்ஸ் என்பவன் இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை பூஜை செய்து இரட்டிப்பாக்கி 5 லட்சமாக தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தை கேரளாவில் உள்ள கோபி என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி கேரளாவில் கோபியிடம் பணத்தை கொடுத்ததும் அவன் சில பாட்டில்களை கொடுத்து அவற்றை ஜெயினிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். கொடுப்பதற்காக காத்திருந்த பொழுதுதான் மூவரும் போலீசில் சிக்கியுள்ளனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படும் நிலையில் பழிவாங்க இப்படி ஒரு நூதன யோசனை கொடுத்த ஜேம்ஸ் அவரை கேரளாவில் இருந்து பாட்டிலுடன் உத்தமபாளையம் வந்த பொழுது தானே போலீசுக்கும் தகவல் தெரிவித்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





