--- --:--:-- --

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து.. குற்றவாளி அதிரடி கைது..!

4

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலைய நடைமேடையில் நின்றிருந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை ஒருவர் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்.

 

காயமடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்த புகார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார். அதன் பெயரில் வண்டலூர் அருகே சுப்பிரமணி என்பவரை கைது செய்தனர்.

 

அவர் சாய்பாபா கோயிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை செய்பவர் என்பது தெரிய வந்த நிலையில் பெண்ணை கத்தியால் குத்தியதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon