ரயிலில் மகனை தவறவிட்ட தாய்.. கடைசியில் நடந்தது என்ன..?
சென்னையில் ரயிலில் தவறவிடப்பட்ட ஆறு வயது சிறுவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு பெண் தனது ஆறு வயது மகன் ஜீவாவுடன் வந்திருந்தார்.
ஜீவாவை முதலில் ஏற்றிவிட்டு அடுத்த கிரிஜா ஏற முயன்றார். ஆனால் கூட்ட நெரிசலில் அவரால் ரயிலில் ஏற முடியவில்லை. அதற்குள் ரயில் புறப்பட்டதால் கிரிஜா கதறி அழுதார்.
இதனை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சிறுவனை மீட்டு எதிர்ப்புறம் கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயில் ஏறி வந்து பெருங்களத்தூரில் தாயாரிடம் ஒப்படைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





