உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று..!
உத்திரபிரதேச அரசு மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 35 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தைகளுக்கு ஒன்ரறை ஆண்டுகளுக்கு பிறகு எச்ஐவி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீரட் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





