--- --:--:-- --

தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்.. எஸ்.பி எடுத்த அதிரடி முடிவு..!

1

நாகையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் காரில் சென்று கொண்டிருந்த பொழுது காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்துள்ளார்.

 

அப்பொழுது காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற போது மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படும் என்று சக காவலர்களிடம் கேள்வி எழுப்பிய அவர் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் கனகராஜுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி கனகராஜுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon