கடனை வசூலிக்க நள்ளிரவு 12 மணிக்கு சென்ற நபர்..!
திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் நள்ளிரவில் கடன் தொகையை வசூலிக்க சென்ற நபரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பேர் இணைந்து குழுவாக தனியார் நிறுவனத்தில் நாற்பதாயிரம் ரூபாய் கடன் பெற்று இருக்கிறார்கள். வாரம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் உடல் நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டுமே செலுத்தி இருக்கிறார்கள்.
இதனால் மீதமுள்ள 600 ரூபாயை வசூலிப்பதற்காக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் இரவு 12 மணிக்கு சென்றுள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் சிவஞானத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





