எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.. ஒருவர் கைது..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேட்டை காலிங்கராயன் தெருவில் இருந்து எம்ஜிஆர் சிலையின் மீது பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் லோகநாதன் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தி விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கைதான நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





