ரயில் நிலையத்தில் பெண் வெட்டி கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்கள் கொலை செய்வதற்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வானூர் அடுத்த நெமிலி சீனிவாசபுரத்தை சேர்ந்த செல்வம் – காயத்ரி தம்பதி கடந்த 14ஆம் தேதி தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை முடிந்து விடு திரும்பிய பொழுது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களும் மாயமானது தெரியவந்துள்ளது. இதில் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர்களை ஜெகதீசன், சூர்யா, சக்தி வேல் ஆகிய மூன்று பேரும் கொலைக்கு முன் செல்வம் வீட்டில் கொள்ளை அடித்ததும் தெரிய வந்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





