--- --:--:-- --

தொடர் விபத்தில் இண்டிகோ விமானம்.. 30 லட்சம் ரூபாய் அபராதம்..!

9

தொடர் விபத்துகள் காரணமாக இன்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றன.

 

ஆறு மாதங்களில் நான்கு விபத்துக்கள் நடந்த நிலையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இது குறித்து விசாரணை நடத்தியது. விமானத்தின் செயல்பாடுகள் பொருளியல் மற்றும் திட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

 

அதில் திருப்தி ஏற்படாத நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம் இண்டிகோ நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon