500 ரூபாய் செல்லாதா..? ரிசர்வ் வங்கி அதிரடி விளக்கம்..!
வரிசை எண்களுக்கு அடுத்து நட்சத்திர குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டபூர்வ ரூபாய் நோட்டுகளை போன்று செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களில் நட்சத்திர குறியீடு இடம் பெற்றுள்ள நோட்டுகளின் செல்லுபடி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எனவே இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் தொடர்ச்சியாக வரிசை படுத்தப்பட்ட 100 எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுக்களை குறைபாடுடன் அச்சான நோட்டுகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டின் வரிசை எண் பகுதியில் நட்சத்திர குறியீடு இடம்பெற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டின் எண் இடம்பெறும் பகுதியில் வரிசை எண்ணுக்கு முன்பு அல்லது இடையில் நட்சத்திர குறியீடு இடம்பெறாமல் வரிசை எண்ணுக்கு பின் நட்சத்திர குறியீட்டைக் கொண்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் சட்டப் பூர்வ ரூபாய் நோட்டுகளை போன்று செல்லுபடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





