சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி..!
நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல் நலம் விசாரித்தார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் அனைத்து எம்பிக்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.
அப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த சோனியா காந்தியிடம் சென்று அவர் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதற்கு தான் நலமுடன் இருப்பதாக பிரதமரிடம் சோனியா காந்தி பதிலளித்ததாக தெரிகிறது.
பெங்களூரிலிருந்து சோனியா காந்தி விமானத்தில் டெல்லி வர முயன்ற பொழுது இயந்திர கோளாறு காரணமாக மத்திய பிரதேசத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிகழ்வு குறித்தும் சோனியா காந்தியிடம் பிரதமர் கேட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





