--- --:--:-- --

தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

2

தொடர் மழையால் இன்றும், நாளையும் தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon