--- --:--:-- --

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்..!

9

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கையர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 212 திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

 

பெரும்பாலான திருநங்கைகள் வீட்டுமனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி, திருநங்கைகள் குடியிருப்புக்குள் அடிப்படையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Right Menu Icon