மது போதையில் நீச்சல் அடித்தவருக்கு நேர்ந்த விபரீதம்..!
மது போதையில் ஏறி நீச்சல் அடித்த நபர் ஏரியிலிருந்து ஆகாய தாமரையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வேளச்சேரி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பிரபு. பெயின்டர் ஆன இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதே போல் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரபு அருகில் இருந்த ஏரியில் குதித்து நீச்சல் அடித்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரபுவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏரியிலிருந்து ஆகாய தாமரையில் சிக்கிய பிரபு மூழ்கியதை பார்த்து போலீசில் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியில் இருந்த பிரபுவை சடலமாக மீட்ட நிலையில் அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





