--- --:--:-- --

கண்புரை அறுவை சிகிச்சை செய்த 18 பேர் கண் பார்வை இழப்பு..!

8

ராஜஸ்தானில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் 18 பேர் சிகிச்சைக்கு பிறகு பார்வை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

சிகிச்சைக்கு பின்னர் 18 பேர் கண்களில் கடுமையான வலி இருப்பதாகவும் பார்வை தெரியவில்லை எனவும் தெரிவித்தனர். இதையடுத்து நோயாளிகள் மறு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு பார்வை திரும்பவில்லை.

 

இந்த நிலையில் சோதனை முடிவுகள் வந்த பிறகு பார்வையை இழந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

Right Menu Icon