கணினி பயிற்சிக்கு செல்லுமாறு கூறியதால் விரக்தியடைந்த பெண் காவலர்..!
ராணிப்பேட்டையில் கணினி பெயர்ச்சிக்கு செல்லுமாறு கூறியதால் மனம் உடைந்த பெண் காவலர் அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் ரூபஸ்ரீ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுமாறு ரூபஸ்ரீயை காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் இதற்கு ரூபஸ்ரீ மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் வகுப்பில் பங்கு பெற வேண்டும் என நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வாலாஜாபேட்டை காவல் குடியிருப்பு வளாகத்தில் அதிக அளவு வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிரேம்குமார் உடனடியாக ரூபஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இது குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





